காதலியைத் தேடும் காதலன்

மோசர் பேர் நிறுவனத் தயாரிப்பான ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் ஜெய், நந்தகி, தியானா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மீரா கதிரவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து மீரா கதிரவன் கூறுகையில், “காதலியைத் தேடி செல்லும் வாலிபனின் கதை இது. மூன்று வித பருவங்களில் ஜெய் வருகிறார். திருநெல்வேலி பகுதியில் கதை நடக்கிறது. இந்த படத்து கதாபாத்திரங்கள் படு யாதர்த்தமானவைகளாக இருக்கும். நம்முடைய உறவினர்கள் போல, நம்முடன் பயணிப்பவர்கள் போல, நண்பர்கள் போல. மனதைத் தொடுகிற அல்லது பாதிக்கிற வாழ்க்கை படத்தில் இருக்கும்” என்றார்.