
தனக்கு லட்சியமே கிடையாது என்று நயன்தாரா கூறியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் அவர மேலும் கூறியுள்ளதாவது: “நான் திரையுலகிற்கு வந்தது டிசம்பர் 2003. திரைத்துறைக்கு வருபவர்கள் பெயரும் புகழும் பெற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். முன்னணி நடிகர் நடிகையாக வேண்டும் என்று எ ண்ணுவார்கள். எனக்கு அப்படி எந்த ஆசையும் கிடையாது. ஒரே ஒரு படம் நடித்துவிட்டு போய்விட த்தான் ஆசைப்பட்டேன். ஆனால், சினிமா என்னை இழுத்துவிட்டது. நானே எதிர்பார்க்காத அளவுக்கு பெயர், புகழ், அந்தஸ்து கிடைத்து விட்டது. சினிமாவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குறிப்பிட்டு கூறும்படி எந்த லட்சியமும் எனக்கில்லை. நல்ல படங்களில் நடிக்க வேண்டும். பெயர், புகழுடன் இருக்க வேண்டும் அவ்வளவுதான்” என்று கூறியிருப்பவர், தன்னுடைய திருமணம் குறித்த கேள்விக்கு, “அது எப்போது, யாருடன் நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால், சரியான நேரத்தில் நடக்கும். எப்போது நடந்தாலும் என் திருமணம் அம்மா அப்பா சம்மதத்துடன்தான் நடக்கும்” என்று பதில் அளித்திருக்கிறார்.