Pages

Friday, March 19, 2010

Tanushree Dutta admires Prakash Raj

பிரகாஜ்ராஜின் நடிப்பைக் கண்டு பிரமித்த தனுஷி தத்தா



தீராத விளையாட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதில் விஷாலுக்கு சந்தோஷமோ இல்லையோ, அவருடைய ப்ளேபாய் விளையாட்டுக்கு தோதாக செட் ஆன மூன்று நாயகிகளும் குஷியாக இருக்கிறார்கள். குறிப்பாக தனுஸ்ரீ தத்தாவுக்கு சந்தோஷமோ சந்தோஷம். அவர் வாயாலேயே கேளுங்களேன்.

“இந்தப் படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரம் பற்றி சொன்னதுமே பிடித்துவிட்டது. இதில் இன்னும் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள் என்பதை யும் அப்போதே சொல்லிவிட்டார்கள். படப்பிடிப்பில் மூவரும் நல்ல தோழிகளாகிவிட்டோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அவர்களுடன் இணைந்து நடித்தது புது அனுபவமாக அமைந்தது. பிரகாஷ்ராஜின் தங்கையாக நடித்த எனக்கு, அவருடைய நடிப்பைப்பார்த்து பிரமிப்பாக இருந்தது. தெரியாத மொழியில் நடிக்கும்போது சிரமமாகத்தான் இருக்கும். என்னுடைய கேரக்டரை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்திருந்ததால், எளிதாக இருந்தது. தொடர்ந்து நல்ல கேரக்டர்களாக அமைந்தால் தமிழில் நடிப்பேன் என்று சொல்கிறார் தனுஷி தத்தா. ஐயையோ அப்போ அடிக்கடி உங்களைப் பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க.

Singam Mp3 song Free Download

Singam Mp3 song Free Download :
Singham free tamil mp3 song download, singam movie review, singham film stills images, anushka in singam, hot anushka in singam film...singam promo mp3 song, video songs, HQ mp3 songs free download.....

Singam Tamil songs

Movie Name : Singam
Year : 2010
Cast : Surya, Anushka Shetty, Prakash Raj, Nassar, Vivek, Cameo, Manorama...
Music Director : Devi Sri Prasad
Banner : Big Pictures
Producer : KE Gnanavel Raja
Director : Hari
Lyrics : Viveka (1,3,4), Na Muthukumar (2,5), Hari (6)
English Lyrics : Megha


Actor Surya Goin to Rock Again..... After his aadhavan he is goin to rock on "singam film" Suriya's 25th film, which is likely to be out later this month. Two of the numbers, featuring Suriya, who plays a top cop, and the heroine Anushka, were shot in Dubai and Oman, expertly choreographed by Brinda. Director Hari, who is returning to cop story after the seminal Saami, has added a galaxy of high performers, including Prakash Raj, Radha Ravi, Manorama, Nasser, ‘Nizhalgal’ Ravi, Aditya and Ajay Ratnam among others. Final post production work is currently underway for the film, which was shot extensively in Tenkasi, Nellai, Courtallam and Karaikudi. Singam, which is Hari's 10th project, will be out in April, amidst high expectations.























Download Mp3 songs here....



. 1 Naane Indhiran - Benny, Manickya Vinayagam
. 2 En Idhayam - Suchithra, Tippu
. 3 Stole My Heart - Shaan, Megha
. 4 Kadhal Vandhale - Baba Sehgal, Priyadharshini
. 5 Singam Singam - DSP, Megha
. 6 Stole My Heart (Unplugged) - Shaan



Prabhudeva’s name in hand, Nayantara defenses

மக்களுக்குக் கவலை வேண்டாம் :
பிரபு தேவா பெயரை பச்சை குத்தியது குறித்து நயன்














‘பிரபு தேவாவின் பெயரை பச்சை குத்தியது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என புரியவில்லை. நமக்காக வாழ்கிறவர்களுக்காக நாம் வாழ்கிறோம். இது தான் உண்மை. இது எல்லோருக்கும் பொருந்தும். அதைத்தான் நானும் செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையிலுள்ள ஒரு திரையரங்கில் பிரபுதேவா, நயன்தாரா ஜோடியாக ஷாருக்கான் - கஜோல் நடித்த ‘மை நேம் இஸ் கான்’ என்ற இந்திப்படத்தை பார்த்தனர். நேற்று முன்தினம் வந்த காதலர் தினத்தையும் இந்த ஜோடி கலகலவென கொண்டாடி இருக்கிறது. விரைவில் இவர்களின் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து நயன்தாரா மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,

“யாரையேனும் எனக்குப் பிடித்துவிட்டால் அவருக்காக நான் எதையும் செய்வேன். பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தியது ஏன் என்று பலரும் கேட்கின்றனர். மக்கள் என்னதான் நினைக்கிறார்கள் என புரியவில்லை. நமக்காக வாழ்கிறவர்களுக்காக நாம் வாழ்கிறோம். இது தான் உண்மை. இது எல்லோருக்கும் பொருந்தும். அதைத்தான் நானும் செய்கிறேன். இப்போதைக்கு எனக்கு சினிமாதான் முக்கியம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்துக் கொண்டிருக்கிறேன். திருமணம் பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை” என்று நயன்தாரா கூறியுள்ளார்.

Shriya takes lesson to IIM students

ஆசிரியையாக மாறிய அழகுப்புயல் ஸ்ரேயா!













ழகான நடிகை ஆசிரியையாக வந்தால் எந்த மாணவனுக்குத்தான் இதயம் கிடுகிடுக்காது. அந்த கிடுகிடு(கிளுகிளு)ப்பை, ஆமதாபாத்தில் உள்ள ‘இந்தியன் இன்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரி’ மாணவர்களுக்கு சமீபத்தில் கொடுத்திருக்கிறார் நடிகை ஸ்ரேயா.

கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சினிமா பற்றிய பாடம் எடுக்க திடீரென அந்த கல்லூரியின் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்திருக்கிறார் ஸ்ரேயா. அபிமான நடிகையை அருகில் பார்த்ததும் மாணவர்களுக்கு தலைகால் புரியவில்லை. பாடம் எடுத்த அழகு ஆசிரியையை அவ்வளவு சீக்கிரம் வெளியே விட மனமில்லாமல், சந்தேகம் என்கிற பெயரில் கேள்விகளைத் தொடர்ந்து வீசியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஒருவழியாகச் சமாளித்து கல்லூரியை விட்டு புறப்பட்டிருக்கிறார் ஸ்ரேயா.

தான் பாடம் எடுத்த அனுபவம் குறித்து ஸ்ரேயா கூறுகையில், “சினிமா தொழில் குறித்து பாடம் எடுக்கத்தான் அந்தக் கல்லூரிக்குச் சென்றேன். இதற்காக தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் பற்றி ஐந்து நாட்கள் படித்து நிறைய விஷயங்களை அறிந்துகொண்டுதான் அங்கு சென்றேன். உலக அளவில் நம்முடைய சினிமா மார்க்கெட்டின் நிலவரம் குறித்தும் பேசினேன். மாணவர்களும் ஏகப்பட்ட சந்தேகங்களைக் கேள்விகளாக்கி என்னிடம் கேட்டார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எப்படியோ பதில் சொல்லி சமாளித்தேன். என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் இது” என்று கூறியிருக்கிறார்.

Prahbu takes hero role again

மீண்டும் ஹீரோவாகிறார் பிரபு

யாரிப்பாளர்கள், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப கதாநாயகனாக மீண்டும் நடிக்க, தயாராகி வருகிறார் பிரபு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு திசைகளில் இருந்தும் வந்து குவியும் குணச்சித்திர வேடங்களை மறுக்காமல் ஒப்புக்கொள்கிறார் பிரபு. எப்படி இப்படி மாறினீர்கள் எனக் கேட்டால், பிரபு சொல்கிறார்…

“நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. எனக்காகவே உருவாக்கியது போன்ற கதாபாத்திரங்களோடு இயக்குநர்கள் வரும்போது சம்மதிக்கிறேன். மீண்டும் கதாநாயகனாக நடிக்க சில தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் கேட்கிறார்கள். அதற்கேற்ப உடம்பு இளைக்க வேண்டும் இல்லையா? அதற்காக உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன்” என்பவர்,

“ரஜினியும் கமலும் எங்கள் குடும்பத்தின் மூத்த அண்ணன்கள் போல. இருவரும் இணைந்து நடிக்கும் படத்தைத் தயாரிக்க வாய்ப்பு கிடைத்தால் அது எனது பாக்கியம். ஆனால், இதை நான் முடிவு செய்ய முடியாது. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று அடக்கம் காட்டுகிறார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “சினிமா எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. கால மாற்றங்களுக்கு ஏற்ப அது மாறிக்கொண்டேதான் இருக்கும். என்றைக்குமே நல்ல படங்களுக்கு வரவேற்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் சென்டிமென்ட் மட்டும் மாறவே மாறாது.

நல்ல கதையோடு வருபவர்களுக்கு சிவாஜி பிலிம்ஸ் நிச்சயம் வாய்ப்பு தரும்” என்றார் பிரபு.

Five pairs in ‘Nanga’, Selva directs

‘நாங்க’… செல்வா இயக்கும் புதிய படம்

85ஆம் ஆண்டு நடக்கும் காதல் கதையை படமாக்குகிறார் இயக்குநர் செல்வா. ‘நாங்க’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் 5 நாயகர்கள், 5 நாயகிகள். ‘நாங்க’ படம் குறித்து இயக்குநர் செல்வா கூறுகையில்,

“வித்தியாசமான காதல் கதை இது. இதில் ஐந்து காதல் கதை இருக்கும. 1985ஆம் ஆண்டில் கல்லூரியில் நடக்கும் காதல் கதையாக இதை உருவாக்குகிறோம். அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும் விதத்தில் செட், உடைகளை வடிவமைக்க உள்ளோம். இது கற்பனை கதைதான். ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு இது ஏதோ அவர்களுடைய வாழ்க்கையில் நேர்ந்ததுபோல உணர்வார்கள். இதற்காக சினிமா பின்னணி உள்ள கதாநாயகன்களைத் தேடி வருகிறோம். இயக்குநர்கள், நடிகர்களின் மகன்களாக இருந்தால் நன்றாக இருக்கும். கதாநாயகிகள் புதுமுகங்கள்தான். மேலும் அமராவதி படத்துக்குப் பிறகு, ‘நாங்க’ படத்தில் இசையமைப்பாளர் பாலபாரதியுடன் இணைகிறேன். ரசிகர்களுக்கு புது அனுபவத்தை இந்த படம் தரும்” என்றார் செல்வா.

Andrea open talk on Selvaraghavan

முக்கியமான நண்பர் : இயக்குநர் செல்வராகவன் பற்றி ஆண்ட்ரியா














‘தனக்கும், இயக்குநர் செல்வராகவனுக்கும் இடையே காதல் இல்லை. அவர் ஒரு முக்கியமான நண்பர் மட்டுமே’ என்று கூறியிருக்கிறார் ஆண்ட்ரியா.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

“நான் இதுவரைக்கும் ஒரு படத்துக்காக 2 வருடமெல்லாம் சிரமப்பட்டதே இல்லை. அதற்காக க் காத்திருந்ததும் இல்லை. இந்த 2 வருடத்தில் பல படங்களை நழுவவிட்டேன். அதற்காக நான் கொஞ்சமும் வருத்தப்படவில்லை. ஆயிரத்தில் ஒருவன் எவ்வளவு பெரிய புராஜெக்ட் தெரியுமா? செல்வா இதை விரைவாக முடித்திருப்பதே பெரிய சாதனை. இடையில் சில இடைஞ்சல்கள் ஏற்படாமல் இருந்திருந்தால், இன்னும் சீக்கிரம் முடித்திருப்பார்” என்று கூறியுள்ள ஆண்ட்ரியா, செல்வாவுடன் காதல் என்ற கிசு கிசு பற்றி கேட்ட கேள்விக்கு கோபப்பட்டிருக்கிறார்.

அவர் தனக்கு மிகவும் முக்கியமான நண்பர். அவ்வளவுதான் என்று மட்டும் பதில் சொல்லியிருக்கிறார் ஆண்ட்ரியா.

China embassy rejects to give visa to Jiiva

‘கோ’ பட ஹீரோ ஜீவாவுக்கு விசா இல்லை ‘போ’ :
சீனத் தூதரகம் அழிச்சாட்டியம்













கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கோ’ படத்தின் கதாநாயகன் ஜீவாவுக்கு விசா தர, சீனத் தூதரகம் மறுத்திருக்கிறது.

இது பற்றிய விவரம் வருமாறு:

கே.வி.ஆனந்த் இயக்கும் படம் ‘கோ’. இந்தப் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அவர் விலகிக் கொண்டதை அடுத்து ஜீவா நடிக்கிறார். கார்த்திகா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் நடப்பது போல் அமைந்துள்ளது. இதற்காக சீனாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதியும் வாங்கியாயிற்று. இந்நிலையில், சீன தூதரகத்தைச் சேர்ந்த துணை அதிகாரிகள் ஜீவாவுக்கு விசா தர மறுத்துள்ளனர். இரண்டாவது முறையாக விண்ணப்பம் செய்தும் விசா மறுக்கப்பட்டதைக் கண்டு, அடுத்து என்ன செய்வது என்று விழித்துக்கொண்டிருக்கிறது படப்பிடிப்புக் குழு.

விசா மறுக்கப்பட்டது குறித்து எந்தவித கருத்தும் கூறாமல் மெளனம் காக்கிறார் ஜீவா.

MK’s grandson becomes hero

கதாநாயகன் ஆனார் கருணாநிதி பேரன்

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து இன்னொரு சினிமா தயாரிப்பாளர் உருவாகி விட்டார். துணை முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினும், அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் தனித்தனியாக தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதல்வரின் இன்னொரு மகனான மு.க.முத்துவும் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அவர் தயாரிக்கும் புதிய படத்தில் அவரது மகன் மு.க.த.அருள்நிதிதான் கதாநாயகன். படத்தை இயக்குபவர் பாண்டிராஜ். இசை தாஜ் நுர். ஒளிப்பதிவு மகேஷ் முத்துச்சாமி. படத்தின் நாயகி மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வரும் நிலையில் முதல்வர் கருணாநிதியை படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதல்வர் கருணாநிதி போலவே அவரது வாரிசுகளும் தமிழ் சினிமாவில் காலூன்றி வெற்றி கண்டு வருகிறார்கள். முதல்வரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி பாடகரானார். இப்போது அவர் பிஸியாக பாடிக் கொண்டிருக்கிறார். தற்போது இளைய மகன் மு.க, தமிழரசு தயாரிப்பாளர் ஆகியிருப்பதுடன், தன்னுடைய மகனையே கதாநாயகனாக்கி விட்டார். ஏற்கனவே முதல்வர் கருணாநிதியின் வீட்டில் இருந்து மு.க.முத்து மற்றும் ஸ்டாலின் ஆகியோர் சினிமா கதாநாயகர்களாக இருந்தது நினைவு கூரத்தக்கது.

Disclaimer

Thanks for the images to their respective owners.

email us to here6509@yahoo.com